Monday, April 15, 2013
Sunday, March 3, 2013
சாரா கே - பேச்சு பாடல்!
எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால், அவள் என்னை "அம்மா" என்பதிற்கு பதிலாக "இலக்கு" என்று அழைத்திருப்பாள், காரணம் வாழ்க்கையில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வு சூழ்நிலையிலும் அவள் நான் இருக்கும் இடம் தேடி வருவாள். நான் அவள் கைகளில் சூரிய அமைப்புகள் பற்றியும், பிரபஞ்சத்தின் போக்குகளை பற்றியும் சித்தரிக்க போகிறேன், அதன்மூலம் அவள் இந்த உலகத்தை முழுவதுமாக அறிய நேரிடும்.
ஆம் அவள் கற்றுக்கொள்ள போகிறாள், இந்த வாழ்க்கை உன் முகத்தை கடுமையாக உதைக்கும், அது நீ மீண்டு எழும்வரை காத்திருந்து, பின்பு வயிற்றில் மிதிக்கும். ஒருவகையில், மூச்சுக்காற்றை உடலில் இருந்து வெளியே உதைப்பதின் காரணமாகத்தான் காற்றின் சுவையை நுரையீரலுக்கு நினைவுபடுத்துகிறோம் அல்லவா!
சில காயங்கள், மருந்து வழியோ அல்லது கவிதை வழியோ சரி செய்ய முடியாது. நான் ஒன்றை அவளுக்கு உறுதியாக சொல்வேன், 'அவள் அந்த வலியை தான்மட்டும் தாங்குவதில்லை'. உன் விரல்களை எவ்வளவு அகலமாக விரித்தாலும், உன் சிறிய கைகளால், உன்னை குணமடைய செய்யும் எல்லா வலிகளையும் கைப்பற்ற இயலாது. என்னை நம்பு, நான் முயற்சித்திருக்கிறேன்.

"மேலும், மகளே.." காற்றில் உனது மூக்கை அப்படி மேல்நோக்கி வைக்காதே. எனக்கும் அந்த தந்திரம் தெரியும், நானும் அதை பல கோடி முறை செய்திருக்கிறேன். நீ ஒரு புகையின் வாசத்தை தேட முயற்ச்சிக்கிறாய், அந்த புகையை பின்பற்றி, எரியும் வீட்டிற்கு மீண்டும் சென்று, தீயினால் அனைத்தையும் இழந்த சிறுவனை கண்டுபிடித்து காப்பாற்ற நினைக்கிறாய். அதற்கு பதில் நீ ஏன் அந்த வீட்டிற்கு தீ வைத்த சிறுவனை கண்டுபிடிக்க கூடாது? கண்டுபிடித்தால் அவனை திருத்தி இருக்கலாம்!
நான் எப்போதும் உனக்கு குடுப்பதற்காக சாக்லேட் கூடுதலாக வைத்திருப்பேன் அத்தோடு ஒரு குடையும் வைத்திருப்பேன், சாக்லேட் சரி செய்ய முடியாத துயரம்தான் எங்கு உள்ளது. ம்ம்ம்?? சரி புரிகிறது, சாக்லேட் சரி செய்ய முடியாத துயரங்கள் சில உள்ளது! அதற்காகத்தான் அந்த குடை. ஏனெனில் மழையினால் எல்லா துயரங்களையும் அழித்து செல்ல முடியும், நீ அனுமதித்தால்.
அவளை, ஒரு கண்ணாடி படகின் கீழ் பக்கத்தின் மூலம் இவ்வுலகை பார்க்க செய்வேன், ஒரு நுண்ணோக்கியின் மூலம் மனித மனத்தில் புதைந்திருக்கும் விண்மீன் அளவு குறிப்பிடுகளை கண்டறிய செய்வேன். ஏனெனில், அப்படித்தான் என் அம்மா எனக்கு கற்று தந்தார். இது போல பல நாட்கள் வரும் என்று, பல நாட்கள் வரும் என்று, என் அம்மா கூறினார்.
சில நேரங்களில் கைகளை விரித்து நீ பிடித்ததெல்லாம் காயங்கள் மட்டுமாக இருக்கும்; சில நேரங்களில் மழையால் கூட துயரங்களை அழித்து செல்ல இயலாது; இதை கண்டு நீ ஏமாற்றம் அடைய நேரிடும். இது போன்ற நாட்களே நீ நன்றி சொல்ல மேலும் கடமை படும் நாட்கள். காரணம், எத்தனையோ முறை கடற்கரை தன்னை திருப்பி அனுப்பினாலும் மீண்டும் வந்து வந்து முத்தம் தரும் கடல் நீரை போன்ற மிகவும் அழகானது எதுவும் இல்லை. இன்பமும் துன்பமும் அது போன்று தான், உன்னை மீண்டும் மீண்டும் வந்து முத்தம் இடும்.
நீ காற்றை சில வெற்றியும் சில தோல்வியும் பெற செய்வாய். நீ நட்சத்திரங்களை வானில் அலங்கரிப்பாய். அறிவில்லாதோர் நொடிக்கு நொடி எத்தனையோ கண்ணி வெடிகளை புதைத்தாலும், கன்னி உன் மனத்தை வாழ்க்கை என்னும் இந்த வேடிக்கையான இடத்தில் புதைக்க மறுக்காதே. ஒருவரை நம்புவதில், நீ அழகான அப்பாவிதான். அது பரவாயில்லை, இந்த உலகம் சர்க்கரையால் செய்யப்பட்டது என்று நீ தெரிந்துகொள். இது எளிதில் கரையும், ஆகையினால் உன் நாவினால் அதை ரூசிக்க தயக்கம் வேண்டாம்.
"மகளே", நான் சொல்வேன், "உன் அம்மா கவலைப்படுபவர், உன் அப்பா போரில் வெற்றி காண்பவர், நீ போதும் என்று சொல்லாத சிறிய கைகளை, சுழலும் பெரிய கண்களையும் கொண்ட தேவதை". நல்லவை எப்போதும் மூன்றாக வரும், ஆம் சில சமயம் கெட்டவையும்! எப்போதாவது தவறு செய்தால், மன்னிப்பு கேட்க மறுக்காதே! ஆனால் மன்னிப்பு கேட்காதே "உன் கண்களில் இருந்து ஒளி சற்று குறைந்தாலும்". உன் குரல் சிறியது, ஆனால் எப்போதும் பாடுவதை நிறுத்திவிடாததே.
இறுதியில் அவர்கள் உன் கையில் இதய வலியை தரும் போதும், போரில் இருந்து நழுவி விலகும் போதும், வெறுப்பாக வந்து உன் கதவின் கீழ் அமரும் போதும், தோல்விகளை பற்றியும் உழைத்து தேய்ந்து போனதை பற்றியும் தெரு ஓரங்களில் உனக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்யும் போதும், அவர்களிடம் சொல், "நீங்கள் உறுதியாக என் அம்மாவை சந்திக்க வேண்டும்!!!" என்று.
உபசாரம்:
இது சாரா கே என்ற கவிதை எழுத்தாளர் TED என்ற "மதிப்புள்ள கருத்துக்களை உலகிற்கு பரப்பும்" இணையதளத்தில் பதிவு செய்த தொகுப்பின் என்னால் முடிந்த மொழிபெயர்ப்பு.
http://www.ted.com/talks/sarah_kay_if_i_should_have_a_daughter.html

Tuesday, January 8, 2013
நான்...நீ...
எதை செய்தாலும் எதுவும் கேட்காத நான்
இருக்கும் வரை
எதை வேண்டுமானாலும் செய்வாய் நீ!
மனிதாபிமானம் இல்லாத நான்
இருக்கும் வரை
மனிதனாய் மாற மாட்டாய் நீ!
அடிப்படை வாழ்க்கையை சொல்லித்தராத நான்
இருக்கும் வரை
பார்த்த இடத்தில் எல்லாம் பலாத்காரம் செய்வாய் நீ!
மறதி நோய் உள்ள நான்
இருக்கும் வரை
பாரதம் முழுவதும் கொன்று குவிப்பாய் நீ!
தண்டனை குடுக்க யோசிக்கும் நான்
இருக்கும் வரை
வெறி நாய் போல திரிவாய் நீ!
இரக்கம் இல்லாத நீ!
பெண்ணை தாய் போல பார்க்க வேண்டும் நீ!
தண்டனை குடுக்க யோசிக்கும் நான்
இருக்கும் வரை
வெறி நாய் போல திரிவாய் நீ!
இரக்கம் இல்லாத நீ!
பெண்ணை தாய் போல பார்க்க வேண்டும் நீ!
அன்பு இல்லாத நீ!
பெண்ணை தங்கை போல பார்க்க வேண்டும் நீ!
தமிழனாய் வாழ வேண்டாம் நீ!
இந்தியனாய் வாழ வேண்டாம் நீ!
மனிதனாய் வாழ வேண்டும் நீ!
Subscribe to:
Posts (Atom)