நம் கனவுகள் பெரும்பாலும் வாய்மொழி காட்சியாகவும், உணர்ச்சி தூண்டுதலாகவும் ஒரு முட்டாள்தனமான பொழுதுபோக்கு கதை கோட்டில் இருக்கக்கூடும். நாம் சில நேரங்களில் நம் தூக்கத்தில் வரும் கனவுகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா, இல்லை அது வெறும் கட்டுக்கதையா? பல நிபுணர்களுக்கு கனவுகளின் சரியான நோக்கம் பற்றி எந்த முக்கியமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
கனவுகள் சீரற்ற மூளை தூண்டுதலால் வருகின்றதோ? அல்லது ஒருவேளை தூங்கும்போது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் ஆரயும்போது வருகின்றதோ? நாம் நம் கனவுகளை புரிந்துகொள்ள வேண்டுமா? பலர் ஆம் என்கிறார்கள், நம் கனவுகளில் இருந்து கற்று கொள்ள ஒரு பெரிய ஒப்பந்தம் வேண்டும். கொஞ்சம் ஆர்வமும் வேண்டும்.
பல நூற்றாண்டுகளாக, நாம் தூங்கும் இந்த இரவு மேடையில் மூளை தன் கனவு நிகழ்ச்சியை அரங்கேற்றும் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆராய்ச்சியாளர்கள் கனவு பற்றி பல கோட்பாடுகள் தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கோட்பாடுகள் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கலாம்:
கனவுகள் வெறும் உளவியல் பாவனை (physiological simulations)
அல்லது
கனவுகள் உளவியல் ரீதியாக தேவை (psychologically necessary)
கார்ல் ஜூங் என்பவர் கனவுகள் வரும்போது நாம் மனநிலையில் விழித்திருப்பது போலவும், உடல்நிலையில் உறங்கிக்கொண்டிருப்பது போலவும் கருதினார். ஆகையினால், நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு மூளை தன் கனவின் மூலம் ஒரு தீர்வு காண முயற்சிக்கிறது என்றார். பின்பு 1973இல் ஆராய்ச்சியாளர்கள் அல்லன் ஹாப்ஸந் மற்றும் ராபர்ட் ம்க்கார்லீ கனவுகள் வெறுமனே நினைவகத்தில் சேமித்து அனுபவங்கள், தடயங்கள், புகைப்படங்களை ஆகியவற்றை இழுத்து வரும் சீரற்ற மூளை தூண்டுதலின் விளைவுதான் என்றனர்.
மூளை தனக்கு வரும் நோக்கம் ஏதுமற்ற படங்கள், நினைவுகள், ஆசைகள், அனுபவங்கள் ஆகியவற்றை கொண்டு நாம் உறங்குவதை உணராமலேயே கிடைத்த தகவல்படி கதைகள் உருவாக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் என்றால் மூளையின் வேலை அதுதானே, "நாம் என்ன அனுபவிக்கிரோமோ அதை நமக்கு உணரச்செய்தல்".
இப்போது சற்று தூக்கத்தின் சில தகவல்களை பார்ப்போம். நம் தூக்கம் ஐந்து நிலைகளுக்கு செல்கிறது. முதல் நிலை, கனம் இல்லாத தூக்கம், இந்நிலையில் சுலபமாக எழுந்துவிடலாம். இரண்டாவது நிலை, சற்று கனமான தூக்கம். அதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது நிலை இன்னும் சற்று ஆழமான தூக்கம். நாம் ஒவ்வொரு நிலையாக செல்லும்போது நமது மூளையின் செயல்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது, டெல்டா மூளை அலைகள் எனக்கூரப்படும் மெதுவான மூளை அலைகளை அனுபவிக்கிறோம்.
தூக்கம் தொடங்கி சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு பிறகு, அதாவது நான்காவது தூக்க நிலைக்கு பிறகு, துரித கண் இயக்கம் எனப்படும் Rapid eye movement (REM) தூக்கத்திற்கு செல்கிறோம். அப்போது இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரிப்பதாகவும், அதனால் கனவுகள் அதிகமாக காண்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கனவுகளுக்கு முக்கிய காரணமான இந்த தூக்க நிலைகளை பற்றி அடுத்த பதிவில் விவரமாக சொல்கிறேன்.