Monday, January 6, 2014

கனவு.. ஒரு பார்வை!

நம் கனவுகள் பெரும்பாலும் வாய்மொழி காட்சியாகவும், உணர்ச்சி தூண்டுதலாகவும் ஒரு முட்டாள்தனமான பொழுதுபோக்கு கதை கோட்டில் இருக்கக்கூடும். நாம் சில நேரங்களில் நம் தூக்கத்தில் வரும் கனவுகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா, இல்லை அது வெறும் கட்டுக்கதையா? பல நிபுணர்களுக்கு கனவுகளின் சரியான நோக்கம் பற்றி எந்த முக்கியமான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

கனவுகள் சீரற்ற மூளை தூண்டுதலால் வருகின்றதோ? அல்லது ஒருவேளை தூங்கும்போது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் ஆரயும்போது வருகின்றதோ? நாம் நம் கனவுகளை புரிந்துகொள்ள வேண்டுமா? பலர் ஆம் என்கிறார்கள், நம் கனவுகளில் இருந்து கற்று கொள்ள ஒரு பெரிய ஒப்பந்தம் வேண்டும். கொஞ்சம் ஆர்வமும் வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக, நாம் தூங்கும் இந்த இரவு மேடையில் மூளை தன் கனவு நிகழ்ச்சியை அரங்கேற்றும் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆராய்ச்சியாளர்கள் கனவு பற்றி பல கோட்பாடுகள் தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கோட்பாடுகள் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கலாம்:

கனவுகள் வெறும் உளவியல் பாவனை (physiological simulations)
அல்லது
கனவுகள் உளவியல் ரீதியாக தேவை (psychologically necessary)



கார்ல் ஜூங் என்பவர் கனவுகள் வரும்போது நாம் மனநிலையில் விழித்திருப்பது போலவும், உடல்நிலையில் உறங்கிக்கொண்டிருப்பது போலவும் கருதினார். ஆகையினால், நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு மூளை தன் கனவின் மூலம் ஒரு தீர்வு காண முயற்சிக்கிறது என்றார். பின்பு 1973இல் ஆராய்ச்சியாளர்கள் அல்லன் ஹாப்‌ஸந் மற்றும் ராபர்ட் ம்க்கார்லீ கனவுகள் வெறுமனே நினைவகத்தில் சேமித்து அனுபவங்கள், தடயங்கள், புகைப்படங்களை ஆகியவற்றை இழுத்து வரும் சீரற்ற மூளை தூண்டுதலின் விளைவுதான் என்றனர்.

மூளை தனக்கு வரும் நோக்கம் ஏதுமற்ற படங்கள், நினைவுகள், ஆசைகள், அனுபவங்கள் ஆகியவற்றை கொண்டு நாம் உறங்குவதை உணராமலேயே கிடைத்த தகவல்படி கதைகள் உருவாக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் என்றால் மூளையின் வேலை அதுதானே, "நாம் என்ன அனுபவிக்கிரோமோ அதை நமக்கு உணரச்செய்தல்".

இப்போது சற்று தூக்கத்தின் சில தகவல்களை பார்ப்போம். நம் தூக்கம் ஐந்து நிலைகளுக்கு செல்கிறது. முதல் நிலை, கனம் இல்லாத தூக்கம், இந்நிலையில் சுலபமாக எழுந்துவிடலாம். இரண்டாவது நிலை, சற்று கனமான தூக்கம். அதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது நிலை இன்னும் சற்று ஆழமான தூக்கம். நாம் ஒவ்வொரு நிலையாக செல்லும்போது நமது மூளையின் செயல்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது, டெல்டா மூளை அலைகள் எனக்கூரப்படும் மெதுவான மூளை அலைகளை அனுபவிக்கிறோம்.

தூக்கம் தொடங்கி சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு பிறகு, அதாவது நான்காவது தூக்க நிலைக்கு பிறகு, துரித கண் இயக்கம் எனப்படும் Rapid eye movement (REM) தூக்கத்திற்கு செல்கிறோம். அப்போது இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரிப்பதாகவும், அதனால் கனவுகள் அதிகமாக காண்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கனவுகளுக்கு முக்கிய காரணமான இந்த தூக்க நிலைகளை பற்றி அடுத்த பதிவில் விவரமாக சொல்கிறேன்.

Friday, January 3, 2014

இலை உதிர் காலம் !

எப்படி சொல்வது..
அன்று எதிர்பாராமல் இருக்கும் வேளையில் என்னை கூர்த்து கவனித்வள்..
இன்று எதிர்பார்க்கும்போது 'யார் இவன்' என்ற வியப்போடு அவள் தன் வேலையை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறாள்!

எப்படி சொல்வது..
என்னை நானே கிள்ளி பார்த்து இது கனவா என்று எண்ணி முடிப்பதற்குள்..
தன்னை மாற்றிக்கொண்டு கனவை போலவே மறைந்துவிட்டாள்!

எப்படி சொல்வது..
இதுவரை பிரிவை பற்றி கவலை பட்டதே இல்லை என்ற பெருமிதத்தோடு இருந்தேன்..
இன்று தான் தெரிகிறது, அப்படி பிரியும் வலி தெரியும் அளவிற்கு யாரிடமும் நான் பழகியத்தில்லை என்று!

எப்படி சொல்வது என் மனதிற்கு இது இலை உதிர் காலம் என்று!

Monday, April 15, 2013

கண்ணீர் !


உனக்காக இலங்கையின்
வடிவமே

கண்ணீர் சிந்துவது போல்
அமைந்ததில்

ஆச்சரியம் ஒன்று இல்லை!


Sunday, March 3, 2013

சாரா கே - பேச்சு பாடல்!

எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால், அவள் என்னை "அம்மா" என்பதிற்கு பதிலாக "இலக்கு" என்று அழைத்திருப்பாள், காரணம் வாழ்க்கையில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வு சூழ்நிலையிலும் அவள் நான் இருக்கும் இடம் தேடி வருவாள். நான் அவள் கைகளில் சூரிய அமைப்புகள் பற்றியும், பிரபஞ்சத்தின் போக்குகளை பற்றியும் சித்தரிக்க போகிறேன், அதன்மூலம் அவள் இந்த உலகத்தை முழுவதுமாக அறிய நேரிடும்.

ஆம் அவள் கற்றுக்கொள்ள போகிறாள், இந்த வாழ்க்கை உன் முகத்தை கடுமையாக உதைக்கும், அது நீ மீண்டு எழும்வரை காத்திருந்து, பின்பு வயிற்றில் மிதிக்கும். ஒருவகையில், மூச்சுக்காற்றை உடலில் இருந்து வெளியே உதைப்பதின் காரணமாகத்தான் காற்றின் சுவையை நுரையீரலுக்கு நினைவுபடுத்துகிறோம் அல்லவா!

சில காயங்கள், மருந்து வழியோ அல்லது கவிதை வழியோ சரி செய்ய முடியாது. நான் ஒன்றை அவளுக்கு உறுதியாக சொல்வேன், 'அவள் அந்த வலியை தான்மட்டும் தாங்குவதில்லை'. உன் விரல்களை எவ்வளவு அகலமாக விரித்தாலும், உன் சிறிய கைகளால், உன்னை குணமடைய செய்யும் எல்லா வலிகளையும் கைப்பற்ற இயலாது. என்னை நம்பு, நான் முயற்சித்திருக்கிறேன்.

"மேலும், மகளே.." காற்றில் உனது மூக்கை அப்படி மேல்நோக்கி வைக்காதே. எனக்கும் அந்த தந்திரம் தெரியும், நானும் அதை பல கோடி முறை செய்திருக்கிறேன். நீ ஒரு புகையின் வாசத்தை தேட முயற்ச்சிக்கிறாய், அந்த புகையை பின்பற்றி, எரியும் வீட்டிற்கு மீண்டும் சென்று, தீயினால் அனைத்தையும் இழந்த சிறுவனை கண்டுபிடித்து காப்பாற்ற நினைக்கிறாய். அதற்கு பதில் நீ ஏன் அந்த வீட்டிற்கு தீ வைத்த சிறுவனை கண்டுபிடிக்க கூடாது? கண்டுபிடித்தால் அவனை திருத்தி இருக்கலாம்!

நான் எப்போதும் உனக்கு குடுப்பதற்காக சாக்லேட் கூடுதலாக வைத்திருப்பேன் அத்தோடு ஒரு குடையும் வைத்திருப்பேன், சாக்லேட் சரி செய்ய முடியாத துயரம்தான் எங்கு உள்ளது. ம்ம்ம்?? சரி புரிகிறது, சாக்லேட் சரி செய்ய முடியாத துயரங்கள் சில உள்ளது! அதற்காகத்தான் அந்த குடை. ஏனெனில் மழையினால் எல்லா துயரங்களையும் அழித்து செல்ல முடியும், நீ அனுமதித்தால்.


அவளை, ஒரு கண்ணாடி படகின் கீழ் பக்கத்தின் மூலம் இவ்வுலகை பார்க்க செய்வேன், ஒரு நுண்ணோக்கியின் மூலம் மனித மனத்தில் புதைந்திருக்கும் விண்மீன் அளவு குறிப்பிடுகளை கண்டறிய செய்வேன். ஏனெனில், அப்படித்தான் என் அம்மா எனக்கு கற்று தந்தார். இது போல பல நாட்கள் வரும் என்று, பல நாட்கள் வரும் என்று, என் அம்மா கூறினார்.

சில நேரங்களில் கைகளை விரித்து நீ பிடித்ததெல்லாம் காயங்கள் மட்டுமாக இருக்கும்; சில நேரங்களில் மழையால் கூட துயரங்களை அழித்து செல்ல இயலாது; இதை கண்டு நீ ஏமாற்றம் அடைய நேரிடும். இது போன்ற நாட்களே நீ நன்றி சொல்ல மேலும் கடமை படும் நாட்கள். காரணம், எத்தனையோ முறை கடற்கரை தன்னை திருப்பி அனுப்பினாலும் மீண்டும் வந்து வந்து முத்தம் தரும் கடல் நீரை போன்ற மிகவும் அழகானது எதுவும் இல்லை. இன்பமும் துன்பமும் அது போன்று தான், உன்னை மீண்டும் மீண்டும் வந்து முத்தம் இடும்.

நீ காற்றை சில வெற்றியும் சில தோல்வியும் பெற செய்வாய். நீ நட்சத்திரங்களை வானில் அலங்கரிப்பாய். அறிவில்லாதோர் நொடிக்கு நொடி எத்தனையோ கண்ணி வெடிகளை புதைத்தாலும், கன்னி உன் மனத்தை வாழ்க்கை என்னும் இந்த வேடிக்கையான இடத்தில் புதைக்க மறுக்காதே. ஒருவரை நம்புவதில், நீ அழகான அப்பாவிதான். அது பரவாயில்லை, இந்த உலகம் சர்க்கரையால் செய்யப்பட்டது என்று நீ தெரிந்துகொள். இது எளிதில் கரையும், ஆகையினால் உன் நாவினால் அதை ரூசிக்க தயக்கம் வேண்டாம்.

"மகளே", நான் சொல்வேன், "உன் அம்மா கவலைப்படுபவர், உன் அப்பா போரில் வெற்றி காண்பவர், நீ போதும் என்று சொல்லாத சிறிய கைகளை, சுழலும் பெரிய கண்களையும் கொண்ட தேவதை". நல்லவை எப்போதும் மூன்றாக வரும், ஆம் சில சமயம் கெட்டவையும்! எப்போதாவது தவறு செய்தால், மன்னிப்பு கேட்க மறுக்காதே! ஆனால் மன்னிப்பு கேட்காதே "உன் கண்களில் இருந்து ஒளி சற்று குறைந்தாலும்". உன் குரல் சிறியது, ஆனால் எப்போதும் பாடுவதை நிறுத்திவிடாததே.

இறுதியில் அவர்கள் உன் கையில் இதய வலியை தரும் போதும், போரில் இருந்து நழுவி விலகும் போதும், வெறுப்பாக வந்து உன் கதவின் கீழ் அமரும் போதும், தோல்விகளை பற்றியும் உழைத்து தேய்ந்து போனதை பற்றியும் தெரு ஓரங்களில் உனக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்யும் போதும், அவர்களிடம் சொல், "நீங்கள் உறுதியாக என் அம்மாவை சந்திக்க வேண்டும்!!!" என்று.


உபசாரம்:
இது சாரா கே என்ற கவிதை எழுத்தாளர் TED என்ற "மதிப்புள்ள கருத்துக்களை உலகிற்கு பரப்பும்" இணையதளத்தில் பதிவு செய்த தொகுப்பின் என்னால் முடிந்த மொழிபெயர்ப்பு.

http://www.ted.com/talks/sarah_kay_if_i_should_have_a_daughter.html

Tuesday, January 8, 2013

நான்...நீ...



எதை செய்தாலும் எதுவும் கேட்காத நான்
இருக்கும் வரை
எதை வேண்டுமானாலும் செய்வாய் நீ!

மனிதாபிமானம் இல்லாத நான்
இருக்கும் வரை
மனிதனாய் மாற மாட்டாய் நீ!

அடிப்படை வாழ்க்கையை சொல்லித்தராத நான்
இருக்கும் வரை
பார்த்த இடத்தில் எல்லாம் பலாத்காரம் செய்வாய் நீ!

மறதி நோய் உள்ள நான்
இருக்கும் வரை
பாரதம் முழுவதும் கொன்று குவிப்பாய் நீ!

தண்டனை குடுக்க யோசிக்கும் நான்
இருக்கும் வரை
வெறி நாய் போல திரிவாய் நீ!

இரக்கம் இல்லாத நீ!
பெண்ணை தாய் போல பார்க்க வேண்டும் நீ!

அன்பு இல்லாத நீ!
பெண்ணை தங்கை போல பார்க்க வேண்டும் நீ!

தமிழனாய் வாழ வேண்டாம் நீ!
இந்தியனாய் வாழ வேண்டாம் நீ!

மனிதனாய் வாழ வேண்டும் நீ!

Wednesday, November 28, 2012

பயணம் தொடர்கிறது... (பாகம் இரண்டு)


வணக்கம்,

விக்கி இணைய தளத்தின் கருத்துபடி இசை பிறந்து குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆதிவாசிகள் ஆப்ரிக்காவில் ஆரம்பித்து வைத்த இசையை தொடர்ந்து ஐரோப்பாவில் தான் இசை அடுத்த வடிவம் எடுத்தது. இந்த காலகட்டத்தை "அறிந்த வரலாற்றிற்கு முந்திய" காலகட்டம் என்று கூறலாம். அப்போது தோன்றிய இசை நாட்டுப்புற பாடல்களாக இன்றும் உலகில் சில பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனை தொடர்ந்து வந்த காலம்தான் பண்டைய இசை காலம். இந்த காலத்தில் இசை எழுத்து வடிவம் பெற்றது என்று கூறலாம். ஆம், இசை ஒரு பண்பாடு சார்ந்த கல்வியாக மாறியது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து இந்தியாவின் இசை வரலாறு சிறிது மெய்ப்படுகிறது. வேதங்கள், ஸ்லோகங்கள் இவையெல்லாம் உருவாக்கப்பட்ட காலம், பண்டைய இசை காலம். நாட்டிய சாஸ்திரம் என்று ஒரு பண்டைய கட்டுரையில் அப்போது நிகழ்ந்த கலை, இசை மற்றும் நடனம் பற்றிய குறிப்புகள் கண்டரியப்பட்டது. இசையின் அளவு குறிப்பு, ராகம் பற்றிய கருத்துக்கள் இந்த கட்டுரையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.




இலங்கையில் ராவணஹதா என்று ஒரு இசை கருவி உள்ளது. இது தேங்காய் ஓடு மற்றும் மூங்கில் மூலம் செய்யப்பட்டிருந்தது. இசையை உருவாக்க வில் பயன்படுத்தும் முதல் நரம்பு (ஸ்ட்ரிங்) கருவி என்று கூறலாம். இதுவே உலகின் முதல் வயலின் என்று கருதப்படுகிறது.


இராமாயணத்தின் காலம் என்று கருதப்படும் பன்னிரெண்டாம் நூற்றாண்டின்போது, அனுமான் இந்த கருவியை எடுத்துக்கொண்டு வட இந்தியா சென்றதாக சொல்லப்படுகிறது. ஆம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேஷ் மாநிலங்களில் இன்றும் கூட இந்த இசை கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து ராவணஹதா மேற்கு நோக்கி மத்திய கிழக்கு (மிட்ல் ஈஸ்ட்) மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு பயணித்தது. பயணத்தின் போது இந்த கருவியை பல மாற்றங்களை கண்டது. பின்னர் பதினாறாம் நூற்றாண்டில், இத்தாலியில் ராவணஹதா நவீன வயலின் வடிவத்தை எடுத்தது.

Saturday, October 6, 2012

இசையின் பயணம்...

வணக்கம் நண்பர்களே,

இது என்னுடைய முதல் பக்கம், இணையதளத்தில்!!! என் தவறுகளை சுட்டி காட்ட உங்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த தொகுப்பு முற்றிலும் இசைக்கும் இசை  கலைஞர்களுக்கும் சமர்ப்பணம். இசை மனிதனுக்கு கிடைத்த மிக சிறந்த வரப்ரசாதம். உருவானது என்னவோ மனிதனால் தான்

மனிதனின் முதல் கால் தடம் பதிந்த ஆப்பிரிகாவே இசையும் பிறந்த இடம் என்று நம்பப்படுகின்றது. ஆதிவாசிகள் எனப்படும் நம் முன்னோர்கள் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒன்று கூடி கற்களை கொண்டும் மரங்களை கொண்டும் இசை எழுப்ப துவங்கியிருக்க வேண்டும், அந்த இசைக்கு ஒருவிதமான முரட்டு நடனமும் ஆடியிருக்க வேண்டும். சில சமயம் விலங்குளை வேட்டையாடும் பொழுது இதமான இசை எழுப்பி தன் மனித இனத்தை எச்சரிக்கையும் செய்திருக்க வேண்டும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய எலும்புத்துண்டில் சில ஓட்டைகளை போட்டு ஒரு புல்லாங்குழல் போல இசைக்க துவங்கிய மனிதன் பின்பு பல இசை கருவிகளை உருவாக்கியது நம்மை ஆச்சர்யப்படவைக்கிறது



மெலடி என்று கூறப்படும் மெல்லிய இசையே மனிதன் இசையிடம் மயங்க ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த இசைக்கு ஒருவகையில் மனிதனின் குரலே முதல் இசை கருவியாக இருந்திருக்க வேண்டும். அது உருவானது மனிதன் மெல்ல பாட முயற்சி செய்தபோது இருக்கலாம் அல்லது தாய் தன் குழந்தையை தூங்க வைக்க மெல்ல முனுமுனுக்க ஆரம்பித்தபோது இருக்கலாம். பண்டை காலங்களில் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சி, துன்பம் என எல்லா தருணத்திலும் இசையை பயன்படுத்திவந்தான். அதுமட்டுமன்றி ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை ஈர்பதற்கும் அவனுக்கு இசை உதவி இருக்கிறது, அதாவது ஆண் குயில் கூவி பெண் குயிலை வசீகரிப்பது போல். மனிதன் காலப்போக்கில் தான் சொல்லவரும் சமுதாய கருத்துகளையும் இசை கலந்த பாடலில் கூற துடங்கினான்

பின்பு அரசர்கள் ஆண்ட காலங்களில் இசை ஒரு அறிய கலையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் கருதப்பட்டது நாம் அறிந்ததே. இசை ஒவ்வொரு  சாம்ராஜியதில்லும் கலாச்சாரத்தின் பெயரால் வேறுபட்டு இருந்தது. இந்த வேறுபாடு முக்கியமாக காணப்பட்ட நாடுகள் ஐரோப்பா, பெர்சியா, இந்தியா , சீனா, எகிப்து ஆகியவை. அப்போது ஐரோப்பாவின் கிரேக்க பகுதிகளில் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து பாடுவது (அதாவது கோரஸ்) வழக்கம். இறை வழிபாடு, திருவிழாக்கள் என பல தருணங்களில் அவர்கள் இவ்வாறு பாடி மகிழ்ந்தனர். மேலும் கல்விமுறையில் இசையை ஒரு முக்கிய பாடமாக கற்றுவந்தார்கள்

பெர்சியா எனப்படும் இன்றைய தென்வடக்கு ஈரான் பகுதியில் இசைக்கு வேறு ஒரு தோற்றம் இருந்தது, இவர்களுக்கு இசை கணிதத்தின் ஒரு கிளை. அதாவது ஹார்மொனி, ரிதம், பிட்ச் என்னும் பல வகை அளவுகோல்களில் இசையை அளக்க ஆரம்பித்ததும் அப்போது இருந்து தான். இங்கும் மனிதனின் குரல் ஒரு முக்கிய இசையாக கருதப்பட்டது, பாடுபவர்களின் முகபாவனை அந்த பாடலின் கருத்திற்கு ஏற்ப இருப்பதை இவர்கள் விரும்புவர்

பயணம் தொடரும்...