Saturday, October 6, 2012

இசையின் பயணம்...

வணக்கம் நண்பர்களே,

இது என்னுடைய முதல் பக்கம், இணையதளத்தில்!!! என் தவறுகளை சுட்டி காட்ட உங்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த தொகுப்பு முற்றிலும் இசைக்கும் இசை  கலைஞர்களுக்கும் சமர்ப்பணம். இசை மனிதனுக்கு கிடைத்த மிக சிறந்த வரப்ரசாதம். உருவானது என்னவோ மனிதனால் தான்

மனிதனின் முதல் கால் தடம் பதிந்த ஆப்பிரிகாவே இசையும் பிறந்த இடம் என்று நம்பப்படுகின்றது. ஆதிவாசிகள் எனப்படும் நம் முன்னோர்கள் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஒன்று கூடி கற்களை கொண்டும் மரங்களை கொண்டும் இசை எழுப்ப துவங்கியிருக்க வேண்டும், அந்த இசைக்கு ஒருவிதமான முரட்டு நடனமும் ஆடியிருக்க வேண்டும். சில சமயம் விலங்குளை வேட்டையாடும் பொழுது இதமான இசை எழுப்பி தன் மனித இனத்தை எச்சரிக்கையும் செய்திருக்க வேண்டும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய எலும்புத்துண்டில் சில ஓட்டைகளை போட்டு ஒரு புல்லாங்குழல் போல இசைக்க துவங்கிய மனிதன் பின்பு பல இசை கருவிகளை உருவாக்கியது நம்மை ஆச்சர்யப்படவைக்கிறது



மெலடி என்று கூறப்படும் மெல்லிய இசையே மனிதன் இசையிடம் மயங்க ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த இசைக்கு ஒருவகையில் மனிதனின் குரலே முதல் இசை கருவியாக இருந்திருக்க வேண்டும். அது உருவானது மனிதன் மெல்ல பாட முயற்சி செய்தபோது இருக்கலாம் அல்லது தாய் தன் குழந்தையை தூங்க வைக்க மெல்ல முனுமுனுக்க ஆரம்பித்தபோது இருக்கலாம். பண்டை காலங்களில் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சி, துன்பம் என எல்லா தருணத்திலும் இசையை பயன்படுத்திவந்தான். அதுமட்டுமன்றி ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை ஈர்பதற்கும் அவனுக்கு இசை உதவி இருக்கிறது, அதாவது ஆண் குயில் கூவி பெண் குயிலை வசீகரிப்பது போல். மனிதன் காலப்போக்கில் தான் சொல்லவரும் சமுதாய கருத்துகளையும் இசை கலந்த பாடலில் கூற துடங்கினான்

பின்பு அரசர்கள் ஆண்ட காலங்களில் இசை ஒரு அறிய கலையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் கருதப்பட்டது நாம் அறிந்ததே. இசை ஒவ்வொரு  சாம்ராஜியதில்லும் கலாச்சாரத்தின் பெயரால் வேறுபட்டு இருந்தது. இந்த வேறுபாடு முக்கியமாக காணப்பட்ட நாடுகள் ஐரோப்பா, பெர்சியா, இந்தியா , சீனா, எகிப்து ஆகியவை. அப்போது ஐரோப்பாவின் கிரேக்க பகுதிகளில் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து பாடுவது (அதாவது கோரஸ்) வழக்கம். இறை வழிபாடு, திருவிழாக்கள் என பல தருணங்களில் அவர்கள் இவ்வாறு பாடி மகிழ்ந்தனர். மேலும் கல்விமுறையில் இசையை ஒரு முக்கிய பாடமாக கற்றுவந்தார்கள்

பெர்சியா எனப்படும் இன்றைய தென்வடக்கு ஈரான் பகுதியில் இசைக்கு வேறு ஒரு தோற்றம் இருந்தது, இவர்களுக்கு இசை கணிதத்தின் ஒரு கிளை. அதாவது ஹார்மொனி, ரிதம், பிட்ச் என்னும் பல வகை அளவுகோல்களில் இசையை அளக்க ஆரம்பித்ததும் அப்போது இருந்து தான். இங்கும் மனிதனின் குரல் ஒரு முக்கிய இசையாக கருதப்பட்டது, பாடுபவர்களின் முகபாவனை அந்த பாடலின் கருத்திற்கு ஏற்ப இருப்பதை இவர்கள் விரும்புவர்

பயணம் தொடரும்...

No comments: