வணக்கம்,
விக்கி இணைய தளத்தின் கருத்துபடி இசை பிறந்து குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆதிவாசிகள் ஆப்ரிக்காவில் ஆரம்பித்து வைத்த இசையை தொடர்ந்து ஐரோப்பாவில் தான் இசை அடுத்த வடிவம் எடுத்தது. இந்த காலகட்டத்தை "அறிந்த வரலாற்றிற்கு முந்திய" காலகட்டம் என்று கூறலாம். அப்போது தோன்றிய இசை நாட்டுப்புற பாடல்களாக இன்றும் உலகில் சில பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனை தொடர்ந்து வந்த காலம்தான் பண்டைய இசை காலம். இந்த காலத்தில் இசை எழுத்து வடிவம் பெற்றது என்று கூறலாம். ஆம், இசை ஒரு பண்பாடு சார்ந்த கல்வியாக மாறியது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து இந்தியாவின் இசை வரலாறு சிறிது மெய்ப்படுகிறது. வேதங்கள், ஸ்லோகங்கள் இவையெல்லாம் உருவாக்கப்பட்ட காலம், பண்டைய இசை காலம். நாட்டிய சாஸ்திரம் என்று ஒரு பண்டைய கட்டுரையில் அப்போது நிகழ்ந்த கலை, இசை மற்றும் நடனம் பற்றிய குறிப்புகள் கண்டரியப்பட்டது. இசையின் அளவு குறிப்பு, ராகம் பற்றிய கருத்துக்கள் இந்த கட்டுரையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ராவணஹதா என்று ஒரு இசை கருவி உள்ளது. இது தேங்காய் ஓடு மற்றும் மூங்கில் மூலம் செய்யப்பட்டிருந்தது. இசையை உருவாக்க வில் பயன்படுத்தும் முதல் நரம்பு (ஸ்ட்ரிங்) கருவி என்று கூறலாம். இதுவே உலகின் முதல் வயலின் என்று கருதப்படுகிறது.
இராமாயணத்தின் காலம் என்று கருதப்படும் பன்னிரெண்டாம் நூற்றாண்டின்போது, அனுமான் இந்த கருவியை எடுத்துக்கொண்டு வட இந்தியா சென்றதாக சொல்லப்படுகிறது. ஆம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேஷ் மாநிலங்களில் இன்றும் கூட இந்த இசை கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து ராவணஹதா மேற்கு நோக்கி மத்திய கிழக்கு (மிட்ல் ஈஸ்ட்) மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு பயணித்தது. பயணத்தின் போது இந்த கருவியை பல மாற்றங்களை கண்டது. பின்னர் பதினாறாம் நூற்றாண்டில், இத்தாலியில் ராவணஹதா நவீன வயலின் வடிவத்தை எடுத்தது.